Posts

புதிய கோவில் எப்படி கட்ட முடியும்?

Image
ஒரு ஊரில் பாழடைந்த கோவில் இருந்தது. "அது எப்போது கட்டப்பட்டது?' என்று யாருக்கும் தெரியாது. எந்த நேரத்திலும் இடிந்து விழுந்துவிடும் என்ற நிலையில் இருந்தது. அச்சம் காரணமாக, அந்தக் கோவிலுக்குச் செல்வதை அறவே நிறுத்தி விட்டனர் மக்கள்.  கோவில் வழியாக மக்கள் செல்ல நேர்ந்தால், வேகமாக நடந்து அந்த இடத்தைக் கடப்பது வழக்கம். அதற்கு, நம் மீது கோவில் இடிந்து விழுவதற்குள், அந்த இடத்தைக் கடக்கவேண்டும் என்று நினைத்தது தான் காரணம்.  அந்த ஊர் பெரியவர்கள் சிலர், கோவிலின் முன்னேற்றத்தின் பொருட்டு, ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு நாள் அது பற்றி கலந்தாலோசிப்பதற்கு ஓர் இடத்தில் கூடினார்கள்.  அவர்கள் நடத்திய அந்த ஆலோசனை கூட்டம், கோவிலுக்குள் நடைபெறவில்லை. "கோவிலுக்குள் கூட்டம் நடைபெறும் சமயத்தில், தங்கள் மீது கோவில் இடிந்து விழுந்து விட்டால் என்ன செய்வது?' என்று அவர்கள் பயந்தது தான் காரணம்.  எனவே கோவிலுக்குச் சற்று தூரத்தில் தான் அவர்கள் கூடிப் பேசினார்கள்.  ஆலோசனை கூட்டத்தில், "கோவிலில் மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளைச் செப்பனிட வேண்டும். வெளிச

எமபயம் நீக்கி அபயம் அளிக்கும் ஈசன்

Image
திருவைகாவூர் திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருக்காளத்தி போன்ற மகாசிவராத்திரி தலங்களின் வரிசையில் முக்கியத்துவம் பெற்றது திருவைகாவூர். காலம் காலமாக வேடனொருவன் சிவராத்திரியன்று ஈசனை பூஜித்த சம்பவம் நிகழ்ந்த தலமே இதுதான்! வேடன் ஒருவன் மானை பார்த்தான். வேடன் நோக்குவதை உணர்ந்த மான் துள்ளிக் குதித்து ஓடியது. அடர்ந்த பிரதேசமான வில்வாரண்யத்திற்குள், அங்கிருந்த முனிவரின் குடிலுக்குள் புகுந்தது. வேடன் விடாது துரத்தி, உள்ளே நுழைந்தான். தவநிதி என்ற அந்த முனிவர் ‘‘மானைக் கொல்லாதே. வேறெங்கேனும் சென்று விடு’’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், வேடனோ, ‘‘இதோ பாருங்கள். என் வேலை வேட்டையாடுவது. உங்கள் பேச்சையெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளுங்கள். ஒழுங்காக மானை விடுவியுங்கள். இல்லையெனில் உங்களைத் தாக்கிவிட்டு மானை பிடித்துச் செல்வேன்’’ என்றான். முனிவர் மெல்ல சிரித்தபடி, ‘‘உன்னைவிட பலமான விஷயத்தைக் கண்டால் நீ பயப்படுவாய் அல்லவா? நான் புலியாக மாறினால் நீ என்ன செய்வாய்? இதோ நானே புலி வடிவில் உன்னை கொல்கிறேன் பார்’’ என்று சொல்லி, புலியாக மாறினார். வேடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பயந்துபோய் அந்தப் புல

ஒரு துளியில் ஒற்றுமை

Image
போஜராஜனின் அவையில் காளிதாசர், பவபூதி, தண்டி என்னும் மூன்று புலவர்கள் இருந்தனர். இதில் யார் சிறந்தவர் என்ற போட்டி எழுந்தது. காளியிடம் வணங்கி, இதற்கான பதில் அளிக்கும்படி போஜராஜன் முறையிட்டான்.  உடனே காளி அங்கு தோன்றினாள். "போஜராஜனே! தண்டி நல்ல கவிஞன்; பவபூதி நல்ல அறிஞன்,'' என்றாள். உடனே அங்கு நின்ற காளிதாசருக்கு கோபம் வந்தது. அவர், "அப்படியானால்... நான் யாரடி?'' என்று காளியைப் பார்த்து கேட்டார்.  புன்னகைத்த காளி, "காளிதாசா! நீயே நான்; நானே நீ! என்னைப் போல் பெருமையுடையவன் அல்லவா நீ!'' என்றாள்.  இதை கேட்ட காளிதாசர் தலைக்கனத்துடன் நடக்கத் தொடங்கினார். அதைப் போக்க விரும்பிய காளி, ஒருநாள் பவபூதிக்கும், காளிதாசருக்கும் இடையே சண்டை வரும்படி செய்தாள்.  மீண்டும் போஜனின் தலைமையில், காளி சன்னிதியில் ஒன்று கூடினர். காளிதாசரும், பவபூதியும் பனை ஓலையில் கவிதை எழுதி, தராசுத் தட்டில் வைத்தனர். பவபூதியின் தட்டை விட காளிதாசரின் தட்டு வேகமாக கீழிறங்கியது. இதைக் கண்ட காளிதாசர் தனக்கே புலமை அதிகம் என மகிழ்ந்தார்.  உடனே, காளி தான் சூடியிருந

திருப்பம் தரும் திருமாகறல்

Image
பிரம்மா அகிலத்தின் நான்கு திசைகளையும் ஒரே நேரத்தில் கம்பீரமாக பார்த்தபடி நின்றிருந்தான். தன் காலடியில் இத்தனை பிரபஞ்சமா எனகால் மடக்கினான். கோணலாய்ப் பார்த்தான். பார்வையில் கர்வம் எனும் கரும்புள்ளி திட்டாய் தெரிந்தது. அந்தப் புள்ளி வட்டமாய் வளர்ந்தது. நான்கு முகங்களும் மெல்ல இருண்டன. கர்வம் சிரசின் மீது சிம்மாசனம் போட்டு அமர்ந்தது. தன்னைத்தானே பார்த்துக் கொண்டான். மெல்ல மெல்ல தன் வேலையைக் குறைத்துக் கொண்டான். தான் எப்படி, எப்படி என்று பலபேரிடம் கேட்டு மகிழ்ந்தான்.  சுத்தமாய் சிருஷ்டி என்கிற விஷயத்தை மறந்தே போனான். கயிலையும், வைகுண்டமும் விழித்துக் கொண்டன. சகல தேவர்களும் திருமாலுடன் சென்று ஈசனிடம் முறையிட்டனர். ஈசன் கண்கள் மூடினார். பிரம்மனைத் தேடினார். பிரம்மன் கர்வக் கொப்பளிப்பில் முற்றிலும் தன் சக்தியிழந்து திரிந்து கொண்டிருந்தான். ஈசனைப் பார்த்ததும் நினைவு வந்தவனாய் வணங்கினான். ஈசன் பிரம்மாவையே உற்றுப்பார்க்க, முதன்முதலாய் தான் சக்தியிழந்த விஷயம் தெரிந்தவனாய் துணுக்குற்றான். ஈசனின் காலடி பற்றினான்.  கண நேரத்தில் தன் தவறு தெரிந்து தெளிவானான். பிரம்மா தன் தவறை உணர்ந்து

வாழ்வு தந்த வீணை

Image
நீண்ட காலமாக குழந்தை இல்லாத மன்னன் பிரதாபனுக்கு ஒரு மகன் பிறந்தான். வித்யாபதி என்று பெயரிட்டு வளர்த்தான். புத்திசாலியாக வளர்ந்த அவன் சரஸ்வதி அருளால் கல்வியிலும், இசையிலும் சிறந்து விளங்கினான். மகனுக்கு பட்டம் சூட்ட முடிவெடுத்தான் மன்னன். அதற்காக நல்லநாள் குறிக்க அரண்மனை ஜோசியரை அழைத்தான். ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர், ""மன்னா! மன்னிக்க வேண்டும். தங்கள் மகன் வித்யாபதிக்கு பட்டம் சூட்டி பயனில்லை. ஏனெனில் அவர் அற்பாயுளே வாழ்வார்,'' என தெரிவித்தார்.  வீரபிரதாபன் அதிர்ச்சியில் ஆழ்ந்தான். ஆனால்,வித்யாபதி சிறிதும் கலங்கவில்லை. "தந்தையே.... இதற்கு போய் ஏன் கவலைப்படுகிறீர்கள். மண்ணில் பிறந்த அனைவரும் ஒருநாள் மறையத் தானே போகிறோம். எனக்கு முடிவுநாள் முந்தி வருகிறது. இதை பெரிதுபடுத்தாதீர்கள்,'' என்றான் சாதாரணமாக. ""மகனே! நீ சொல்வது உண்மை தான். இருந்தாலும், பெற்றவன் என்ற முறையில் பிள்ளை நீண்ட காலம் வாழ வேண்டும் என்று நினைப்பது இயல்பு தானே. என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது,'' என்றான்.  "தந்தையே! உங்கள் கண்ணெதிரில் இருப்பதால் தானே

மனதில் கட்டிய ஒரு சிவாலயம்

Image
விசுவநாதபுரம் ஒரு சிறிய கிராமம். இங்கு காசிநாதன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான அவருக்கு, ஒரு சமயம் ஏதோ பிரச்னை வந்தது. அதனால் ஒரு ஜோதிடரிடம் தன் ஜாதகத்தைக் கொடுத்து பலன் கேட்க நினைத்தார். இதற்காக அருகிலுள்ள விசாலாட்சிபுரம் கிராமத்திற்கு ஒரு பவுர்ணமியன்று ஜோதிடரை தேடிச் சென்றார்அந்த ஜோதிடர் தெய்வபக்தி உள்ளவர், நல்லவர், ஒழுக்கமானவர், நேர்மையான முறையில் பலன் சொல்பவர், அவர் சொன்னது அப்படியே பலிக்கும்'' என்று மக்களிடம் பெயர் பெற்றிருந்தார்.  காசிநாதன் ஜோதிடரைச் சந்தித்தபோது மாலை மணி நான்கு.  ஜோதிடர் விவசாயியின் ஜாதகத்தைக் கையில் வாங்கினார். ஜாதகத்தைப் பார்த்த உடனேயே அவருக்கு, "இந்த விவசாயிக்கு இன்று இரவு ஏழு மணிக்கு ஒரு கண்டம் இருக்கிறது. இன்றைய தினமே அவர் இறந்துவிடுவார்' என்று புரிந்தது. அது அவருக்கு வருத்தம் தந்தது.  அதை விவசாயியிடம் நேரில் எப்படி சொல்வது? அது அநாகரீகம் அல்லவா!' என்று எண்ணினார் ஜோதிடர். எனவே, ஜாதகம் பார்ப்பதைத் தவிர்க்க, ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்ல முடிவு செய்தார்.  அவர் விவசாயியிடம் கனிவுடன், "ஐயா! நீங்

குடந்தை அமுதம்

Image
1. அமிர்த கலசம் இருந்த கும்பத்துக்கு வாய் மட்டுமல்லாமல், கமண்டலம்போல மூக்கும் இருந்தது. இந்த மூக்கு வழியே சிவபெருமான் தொடுத்த பாணத்தால் அமுதம் வெளிவந்தது. கும்பத்தின் மூக்கிற்கு கோணம் என்று பெயருண்டு. அந்த கோணம் விழுந்த தலமே கும்பகோணம் என்றாயிற்று.  2. தேவாரத்தில் இத்தலம் குடமூக்கு என்றே அழைக்கப்பட்டது. விழுந்த இரு அமுதத் துளிகள் தனித் தனி குளமாக மாறின. ஒன்று மகாமகக் குளம்; மற்றொன்று  பொற்றாமரைக் குளம். 3. பூரண கும்பம் என்பது அதன் சிகரமாக விளங்கும் தேங்காய், பூணூல், மாவிலை, தீர்த்தம் என்று எல்லாமும் அடங்கியது. இந்த கும்பத்தினின்று நழுவிய தேங்காய் விழுந்த இடத்துக்கு அருகிலே உள்ளதுதான்  இன்றைய மகாமகக் குளம்.  4.தேங்காய் லிங்க உருபெற்று சிவமானது. இன்றும் குளத்தருகே உள்ள இந்த கோயில் மூலவருக்கு நாரிகேளேஸ்வரர் என்ற பெயருண்டு. நாரிகேளம் என்றால் தேங்காய் என்று பொருள்.  5. கும்பத்தைச் சுற்றியிருந்த பூணூல் குளத்தின் அருகே விழுந்தது. அங்கு ஸூத்ரநாதர் எனும் திருநாமத்தோடு ஈசன் எழுந்தருளியுள்ளார். ஸூத்ரம் என்றால் பூணூல் என்று பொருள்.  6. கோயிலின் நாயகன் கும்பத்தினுள்