நந்தியின் வலது காதில் தங்கள் குறைகளைக் கூறினால் நிறைவேறுமா....?



தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகில் தேப்பெருமா நல்லூர் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியுடன் எம்பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.


பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார்.

ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார். இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலது பக்கம் உள்ள காது மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், நந்தியே! வருந்தாதே.

"யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்" என்று ஆறுதல் கூறினார். அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகி விடுகிறது என்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

உண்மையான யோகி என்பவன் யார்? உண்மையான யோகியின் அடையாளம் என்ன ? நமக்கு வழிகாட்டுகிறது கீதை

பகவத் கீதையில் குலதெய்வ வழிபாடு பற்றி கூறுவதென்ன...?